செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது

 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 மில்லியனை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து  10 ஆயிரத்து 171 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,033 பேரும், ஜெர்மனியிலிருந்து 2,426 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் அவுஸ்திரேலியாவிலிருந்து 1,806 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 1,803 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 33 லட்சத்து 5 ஆயிரத்து 766 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This