சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம் 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில், இந்தியாவிலிருந்து 269,780 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 124,652 பேரும் ரஷ்யாவிலிருந்து 114,644 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜூலை மாதத்தில் இதுவரை 145,188 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 27,786 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், இது 19.1% ஆகும்.

மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 16,750 பேரும், நெதர்லாந்திலிருந்து 10,809 பேரும், சீனாவிலிருந்து 5,904 பேரும், பிரானஸ் நாட்டினர் 7,732 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

 

Share This