ரொபோ ஷங்கர் வீட்டில் இணைந்த புது நபர்…இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு
நடிகர் ரொபோ ஷங்கர் மகள் இந்திரஜா விஜய்யின் பிகில் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இத் தம்பதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஆனால், சில வாரங்களிலேயே இந்திரஜா கர்ப்பமாக இருப்பதை அறிவித்து நிகழ்ச்சியிலிருந்து பாதியில் விலகினர்.
கர்ப்பமாக இருந்த இந்திரஜா அவ்வப்போது அவரது கர்ப்பக்காலத்தின் அழகிய தருணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்.
இந்நிலையில், இந்திராஜாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆனந்தத்துடன் பகிர்ந்துள்ளனர்.