
கலஹாவில் கண்டெடுக்கப்பட்ட ‘மர்மப் பாறை’ சாதாரணக் கல் தான்
கண்டி, கலஹா பகுதியில் உள்ள கோவில் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான பாறை குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது.
இது ‘லெப்ரடோரைட்’ (Labradorite) வகையைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பாறை என்றும், இதற்குப் பெரிய அளவில் வணிக ரீதியான அல்லது சந்தை மதிப்பு இல்லை என்றும் தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை கற்கள் பொதுவாக ‘லெப்ரடோரெசென்ஸ்’ (Labradorescence) என்று அழைக்கப்படுகின்றன. இது இயற்கையாகவே நீல நிறத்தில் காணப்படக்கூடியது.
இந்தப் பாறையானது மற்றொரு பெரிய பாறைக்குள் பதிந்திருந்த ஒரு சிறிய அளவிலான லெப்ரடோரைட் வகை கல் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது ‘ஃபெல்ட்ஸ்பார்’ (Feldspar) எனும் கனிம வகையைச் சார்ந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாறையில் காணப்படும் ஒருவித வானவில் போன்ற ஒளிச்சிதறல் (Rainbow effect) மற்றும் தனித்துவமான கனிமப் பண்புகள் காரணமாகவே இது பலருடைய கவனத்தை ஈர்த்தது.
பார்ப்பதற்கு விலையுயர்ந்த ரத்தினம் போலத் தெரிந்தாலும், அறிவியல் ரீதியாக இதற்கு மிக உயர்ந்த மதிப்பு இல்லை என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
