கொழும்பில் துணிகரமாக நடந்த கார் திருட்டு – ஒடும் வாகனத்தில் இருந்து குதித்தப் பெண்

ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கார் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
81 முதயவர், 76 வயதான தனது மனைவியுடன் காரில் அருகிலுள்ள வங்கிக்குச் சென்ற போது இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
தனது மனைவியை காரில் இருக்கச் செய்துவிட்டு, முதியவர் காரை விட்டு வெளியேறியதும், சந்தேகநபர் காரை எடுத்துச் சென்றுள்ளார்.
கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேக நபர் நிறுத்தப்பட்டிருந்த காரைசுற்றி வளைத்து, உள்ளே தனியாக இருந்த பெண்ணைக் கவனித்து, திடீரென காரில் நுழைந்து பின்னர் காரை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண்ணை வெளியே குதிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் திடீரென நடந்த சம்பவத்தால் பயந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நகரும் வாகனத்தில் இருந்து அந்தப் பெண் குதித்ததாகவும் கூறியுள்ளார்.
சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி திருட்டு குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட கார் கொழும்பு நோக்கிச் செல்வதைக் கண்டறிந்த காட்சிகள் மூலம் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே வாகனம் அன்றைய தினம் தெஹிவளையில் நடந்த தங்கச் சங்கிலி பறிப்பு குற்றச் செயலிலும் பயன்படுத்தப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.