கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – நாடாளுமன்றில் விளக்கிய நளிந்த ஜயதிஸ்ஸ

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) நாடாளுமன்றத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார்.
பாதாள உலகத்தை அடக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவற்றையெல்லாம் நாடாளுமன்றத்தின் முன் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பினார், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெளிவுபடுத்தினார்.
சம்பவம் தொடர்பில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
“சபாநாயகரே, இந்த நேரத்தில், புதுக்கடை நீதிமன்றத்திற்கு வந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.. நீதிமன்றம் எண் 5 இல் கணேமுல்லவில் சஞ்சீவ என்ற நபர் கொலை செய்யப்பட்டார்.”
“நேற்று இரவு மித்தேனியாவில் இரண்டு குழந்தைகளுடன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இப்போது புதுக்கடையில் என்ன நடந்தது.”
“இப்போது இது இந்த நாட்டில் ஒரு பெரிய பாதுகாப்புப் பிரச்சினை எழுந்துள்ளது.”
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய, ஆளும் கட்சி அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“பாதாள உலக நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது. எனவே, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பாதாள உலகமும், கருப்புப் பணமும், போதைப்பொருள் கடத்தலும் ஈடுபட்டுள்ளது உண்மைதான். இதில் ஈடுபட்டுள்ள சிலர் இலங்கையில் கூட இல்லை.”
“நாங்கள் இது தொடர்பில் மிகவும் தீவிரமாக செயற்படுவோம் என்று நான் கூற விரும்புகிறேன்.”
“பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையாக தலையிடுகிறது. பாதாள உலகத்திற்கு சுதந்திரம் வழங்கப்படாது.”