புனித ரமலான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) தொடங்குகிறது.
அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) இரவு பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முகமது முனீர் தெரிவித்தார்.