அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவு

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா பிரதி தேர்தல் ஆணையாளர் ரவீந்திர விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 18,96,304 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட 15,175 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.