வல்வையில் கோலாகலமாக நடந்த பட்டத் திருவிழா

வல்வையில் கோலாகலமாக நடந்த பட்டத் திருவிழா

வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சிறப்பு விருந்தினராக  வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

Share This