அரசாங்கமே மாபியாவில் ஈடுபடுகிறது – டட்லி சிறிசேன

அரசாங்கமே மாபியாவில் ஈடுபடுகிறது – டட்லி சிறிசேன

இந்தப் பருவத்தில் நெல் அறுவடையை விலைக்கு வாங்க 325 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அரசாங்கம் 5 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இம்முறை 26 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடையை எதிர்ப்பார்ப்பதாகவும், அரசியல்வாதிகள் தமது இயலாமை, திறமையின்மை, அறியாமையை மறைக்க அரிசி மாபியா என குற்றம் சுமத்தி வருவதாகவும் டட்லி சிறிசேன தெரிவித்தார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்தில் டொலர் பெறுமதி குறைவாக காணப்பட்ட போது உரத்திற்காக 42 பில்லியனை ஒதுக்கியுள்ளதாகவும் இன்று ஒரு டொலரின் பெறுமதி 300 ஆக இருக்கும் போது 35 பில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னரான கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எந்தவொரு அரசியல்வாதியும் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கவே விரும்புகிறார்கள்.

நாட்டில் உண்ண அரிசி இல்லை. தேங்காய் இல்லை.

மாபியா எனக் கூறிக் கொண்டு தங்களுடைய இயலாமை, திறமையின்மை, அறியாமையை மறைக்க முயல்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.

Share This