அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பொம்மையாக மாறிவிட்டது!

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பொம்மையாக மாறிவிட்டது!

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடும் ஒரு கைப்பொம்மையாக மாறிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்று வரும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடும் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பொம்மையாக அரசாங்கம் மாறிவிட்டது.” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும், கடந்த அரசாங்கம் உருவாக்கிய, நாட்டு மக்கள் மீது சுமையை ஏற்றும் சர்வதேச நாணய நிதிய உடன்பாட்டுக்கு தற்போதைய அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது என எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை, எந்தவொரு நோக்கமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பான்மையாக பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை மீறும் ஒரு அரசாங்கமே காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This