மூன்று வருடங்களின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்

மூன்று வருடங்களின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்

அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் அதன் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூறுவது உசிதமானதல்ல. புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்று மூன்று வருடங்களின் பின்னர் தான் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர்,ஒரு அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் எதும் பெரிதாக சாதித்து விட முடியாது.

மூன்று வருடங்களின் பின்னரே எந்த பக்கம் போகின்றது என்று தெரியும்.கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் இதற்கு முன்னர் எனது ஆட்சி காலத்தில் எவ்வாறு செயற்பட்டுள்ளேன் என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தால் அது தொடர்பில் தெரிந்து கொள்ளலாம்.“நானும் ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்தேன்.

கணக்காய்வாளர் நாயகத்திற்கான நியமனம் ஒரு மணித்தியாலத்தில் செய்யக்கூடிய வேலையாகும்.பிரதேச சபைகளின் பாதீடு வாக்கெடுப்பில் உறுப்பினர்களின் நிலைப்பாடு மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்.

அதை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி சட்டத்தின் கீழ், இதுபோன்ற சூழ்நிலைகளை ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலம் தீர்க்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்தவொரு நபருக்கும் ஜனநாயக ரீதியாக தங்கள் வாக்கைப் பயன்படுத்த சுதந்திரம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

“பொதுவாக, புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் சிறப்பாக செயல்படுகின்றதா இல்லையா என்பதனை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே சரியாக மதிப்பிட முடியும்” என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )