இன்று மாலை ரிலீஸாகும் விடாமுயற்சி படத்தின் முதல் பாடல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சந்தீப் கிஷன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
இந்நிலையில் இப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சவதீகா எனப் பெயரிடப்பட்டுள்ள இப் பாடலை அனிருத் மற்றும் அந்தோனிதாசன் பாடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 5.05இற்கு லிரிக் வீடியோ வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.