‘Clean Srilanka’ திட்டத்தில் முழு நாடும் மீள கட்டியெழுப்பப்படும் – பட்ஜெட்டில் புதிய பொருளாதாரத் திட்டங்கள் ; ஜனாதிபதி அறிவிப்பு
‘Clean Srilanka’ (க்ளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முழுமையாக மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சலால் அரசாங்கத்திற்கு காணப்படுகிறது. குறித்த சவாலை நிறைவேற்றுவதற்கு முழு அரசியல் அதிகாரமும் துணை நிற்கும்.
புதிய அரசியல் கலாசாரத்தின் கீழ்தான் புதிய வருடம் ஆரம்பமாகிறது. மக்களுக்கு எதிராக அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் தோல்விகண்டுள்ளன.
எமது பொருளாதாரம் கடந்த பல தசாப்தங்களாக பாரிய வீழ்ச்சியை அடைந்திருந்தது. பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்திருந்தது. தற்போது பொருளாதாரத்தை ஓரளவு ஸ்தரிப்படுத்தியுள்ளோம். புதிய வருடத்தில் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறோம்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். அருகம்பவை மையப்படுத்தி தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எமது பாதுகாப்பு துறை அந்த முயற்சியை தோல்வியடைய செய்திருந்தனர். எமது நாட்டில் நீதியை நிலைநாட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் அதிகாரத்துக்கு மேல் உள்ளவர்கள் சட்டத்தையும் அரசியலமைப்பையும் மீறியிருந்தனர்.
நாட்டில் மீண்டும் சட்டவாட்சியை ஏற்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். அதேபோன்று ஊழல் – மோசடிகள் புற்றுநோயை போன்று முழு நாட்டிலும் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனை ஒழிக்க நாம் பாரிய முயற்சிகள் எடுத்துள்ளோம்.
குற்றப்புலனாய்வு பிரிவு, பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். அரசியல்வாதிகளாக நாம் அதற்கான முன்னுதாரணங்களை காண்பித்துள்ளோம். ஆனால், அரசியல்வாதிகளின் முன்னுதாரணம் மாத்திரம் போதாது. அரசியல் நிறுவனங்களின் முழுமையான கட்டமைப்பும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மூன்று பிரதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். வறுமையில் உள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். பொருளாதாரம் சிறியதொரு தரப்பினரிடம் இருக்கும் போது அந்தப் பொருளாதாரம் வளர்ச்சியடையாது. வரவு – செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரத் திட்டங்கள் முன்மொழியப்படும்.
இரண்டவாது ஊழல் மோசடியை ஒழிக்க நாட்டியை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும். அடுத்தப்படியாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம். இதன் ஊடாக சுற்று சூழலை சுத்தப்படுத்துவது மாத்திரமல்ல நோக்கம். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முழுமையாக மீள கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.” என்றார்.