அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி

ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்லும் நோக்கி தனியார் பேருந்து ஆபத்தான முறையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளத.
பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி சுமுகமாக பயணித்துக்கொண்டிருந்தது.
எனினும், நல்லதன்னியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து அதிக வேகத்தில் சென்று முன் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டது.
இதன்போது, பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிறீகம பகுதியில் வைத்து விபத்து இடம் பெறவிருந்ததாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளதோடு அந்த காட்சிகளும் எமது கேமராவில் பதிவாகியிருந்தது.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்து தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் அவதானத்தை மேற்கொண்டு உரிய பேருந்தின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொளாளுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தனியார் பேருந்தின் நடத்துனர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.