தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்களை வாழவைக்க முடியாது – எதிர்க்கட்சி தலைவர்
![தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்களை வாழவைக்க முடியாது – எதிர்க்கட்சி தலைவர் தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்களை வாழவைக்க முடியாது – எதிர்க்கட்சி தலைவர்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/sajith.jpg)
நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கம் தற்போது ஆட்சியமைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று விவசாயிகளுக்கு நெல்லை விற்பனை செய்ய முடியாமல் , நுகர்வோரால் தாங்க முடியாத விலைக்கு தேங்காய், அரிசி, உப்பு போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, அத்தியாவசிய உணவுகளை வழங்க முடியாத ஒரு அரசாங்கம் மக்களை எப்படி வாழவைக்கும் என்பதில் ஒரு சிக்கல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அவிஸ்ஸாவலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இன்று பெரும்பாலான மக்கள் கடன் சுமையில் மூழ்கியுள்ளனர். நன்றாக வாழ்ந்த மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும், அவர்கள் உற்பத்தி, நுகர்வு மற்றும் முதலீடு செய்வதைக் குறைத்து வருகின்றனர்.
விவசாயிகள் தங்கத்தை அடமானம் வைத்து விவசாயத்தில் ஈடுபட்டாலும், உரமும் நிலையான விலையும் இல்லை, இதனால் அவர்கள் கடனில் கைதிகளாகிவிட்டனர்.
அதன்படி, கூட்டுறவுத் துறையிலிருந்து கடன் வாங்குவது அதிகரித்துள்ளது, மக்களுக்கு வருமான ஆதாரங்கள் இல்லை.
எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை வழங்குவதாக அரசாங்கம் கூறியிருந்தாலும், இன்று அவர்களே வயல்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்திக்க பயப்படுகிறார்கள்.
பொய் சொல்லி, ஏமாற்றி, மக்களை சுரண்டும் பழக்கத்தால் இன்றைய சமூகம் அநாதையாக மாறிவிட்டது.” எனத் தெரிவித்தார்.