கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நாடு முழுமையாக சுத்தப்படுத்தப்படும் – துறைமுக அதிகார சபையின் தலைவர்
“நாட்டில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அந்த பலவீனங்களைத் தவிர்த்து வெற்றிக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டத்தை நாம் நெருங்கி வருகிறோம் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
”கடந்த ஆண்டு நாம் செய்த சாதனைகளை நிறைவேற்றவும், எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகளை நிறைவேற்றவும் அனைவரும் பங்களிக்க வேண்டும்
ஜனாதிபதியின் தலைமையிலான “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் மக்கள் திட்டமான “செல்வம் நிறைந்த நாடு – அழகான வாழ்வு” என்பதை வெற்றிக்கொள்ள முழு நாட்டையும் சுத்தப்படுத்தி உகந்த சமூக-பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.