கொள்கலன் நெரிசல் விரைவில் தீரும்!

கொள்கலன் நெரிசல் விரைவில் தீரும்!

துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசல் அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் முற்றிலுமாக நீங்கும் என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க ஆகியோர் தினமும் துறைமுகத்திற்கு வருகை தந்து இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் அதிக எண்ணிக்கையானது சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வருவதுடன், ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து சீனாவிலிருந்து கொள்கலன் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சீனாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒரு மாத கால விடுமுறை வழங்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் வரை நாட்டிற்குள் நுழையும் கொள்கலன்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும் என்றும், அந்தக் காலகட்டத்தில் தற்போதுள்ள கொள்கலன் நெரிசல் விரைவில் தீர்க்கப்படும் என்றும் இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This