பிரித்தானிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரித்தானிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடத்தக்கோரும் புகார் மனுவில் 57,000 பேர் கையெழுத்திட்டுள்ளதால் பிரித்தானிய பிரதமர் Keir Starmer  இன் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும், மாற்றம் தேவை என கருதினால் மக்கள் புகார் மனுவில் கையெழுத்திடலாம் எனக் கூறும், அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் புகார் மனுவில் இதுவரை 57,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் புகார் மனு தொடர்பான விதிகள், மனுவில் 10,000 பேர் கையெழுத்திட்டிருந்தாலே அந்த மனுவுக்கு அரசு பதிலளிக்கவேண்டும் என்கின்றனர்.

100,000 பேர் கையெழுத்திட்டால், அந்த மனு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எழுத்துக்கொள்ளப்படவேண்டும்.

தற்போது பொதுத்தேர்தல் வேண்டும் எனக்கோரும் புகார் மனுவில் 57,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதால், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதில் முழு வெற்றி பெறாதது மற்றும் ஓய்வு பெற்றோருக்கான நிதி உதவியொன்று நிறுத்தம் முதலான பிரச்சினைகளை சமாளிக்க ஸ்டார்மர் அரசு திணறிவரும் நிலையில், தேர்தல் கோரும் புகார் மனு அரசுக்கு கூடுதல் தலைவலியை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )