நாடாளுமன்றில் சாணக்கியன் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்

நாடாளுமன்றில் சாணக்கியன் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்

மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் தனி உறுப்பினர் முன்மொழிவாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள தடைகளை நீக்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.

அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This