சுழல் 2 வெப் தொடரின் ஆடியோ ஜூக்பொக்ஸ் அல்பம் வெளியானது

பிரம்மா – அனுசரண் இயக்கத்தில் வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள சுழல் 2 தி வோர்டெக்ஸ் வெப் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த வெப் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வெப் தொடரின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.
இத் தொடர் பல கதையம்சங்களைக் கொண்டதாக அமையவுள்ளது.
இந்நிலையில் இத் தொடரில் இடம்பெற்றுள்ள ஆடியோ ஜூக்பொக்ஸ் அல்பம் வெளியாகியுள்ளது.
இதில் மொத்தம் 9 பாடல்கள் மற்றும் 9 மியூசிக் ட்ரெக்குகளும் இடம்பெற்றுள்ளன.