
2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) ஆரம்பமாகின்றன.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநீருபத்துக்கமைய முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025 ஆம் கல்வி ஆண்டு கடந்த டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் நிறைவடைந்தன.
