பாகுபலி ரொக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் ஆரம்பம்

பாகுபலி ரொக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் ஆரம்பம்

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து நாளை (24) காலை 8.54 க்கு பாகுபலி ரொக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 ஐ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 தொன் நிறையுடைய ‘ப்ளுபேர்ட்-6’ என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ரொக்கெட் தயார் நிலையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயற்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரொக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 க்கு ஆரம்பமானது.

விண்வெளி நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ரொக்கெட் ஏவுவதற்கு முன்பாக திருப்பதி திருமலை வெங்கடேசுவர சாமி கோவிலில் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அந்தவகையில், ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுடன் திருமலைக்கு நேற்று சென்று கோவில் சடங்குகளில் பங்கேற்றதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )