போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து – கம்போடியா – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு

போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து – கம்போடியா – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இன்று இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (29) நள்ளிரவு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகள் மலேசியாவில் இன்று (28) நடைபெற்றன.

மலேசியாவின் புத்ராஜயாவில் உள்ள மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமின் உத்தியோகபூர்வ இல்லத்தில், தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் மனெட் ஆகியோருக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தூதர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவாக, இரு நாடுகளும் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This