நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘டெஸ்ட்’ திரைப்படம்

சசிகாந்த் இயக்கத்தில் வொய் நொட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிகாந்த் தயாரிக்கும் திரைப்படம் டெஸ்ட். இப் படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப் படத்துக்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.
அண்மையில் இப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படம் ஏப்ரல் 4 ஆம் திகதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.