மின்சார வாகன விற்பனையில் பாரியளவில் சரிவை சந்தித்துள்ள டெஸ்லா

மின்சார வாகன விற்பனையில் பாரியளவில் சரிவை சந்தித்துள்ள டெஸ்லா

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக டெஸ்லாவின் விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதால் தமது முதல்தர நிறுவனம் என்ற பெயரை சீனாவின் BYD நிறுவனத்திடம் இழந்துள்ளது.

2025இல் டெஸ்லா 1.64 மில்லியன் வாகனங்களையே விற்பனை செய்துள்ளது. இது 2024 வருடத்தை விட 9 சதவீதம் சரிவாகும்.

சீனாவின் BYD நிறுவனம் 2025இல் 2.26 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளதால் டெஸ்லாவை பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )