கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்

கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை தொடர்ந்து அந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தல் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ,

”கிழக்கு மாகாணத்தில் செயல்படும் தீவிரவாதக் குழு குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர்.

இந்தப் பகுதியில் செயல்படும் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து தகவல் கிடைத்துள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் குழு பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய பொலிஸார், புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.  இந்த விடயம் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சில தகவல்களையும் வழங்கினார்.” என்றும் அவர் கூறினார்.

Share This