நுவரெலியாவிற்கு தற்காலிகமான பெண்கள் காப்பு நிலையம் திறப்பு

நுவரெலியாவிற்கு தற்காலிகமான பெண்கள் காப்பு நிலையம் திறப்பு

தற்காளிக பெண்கள் காப்பு மத்திய நிலையமொன்று அண்மையில் நுவரலியாவில் திறந்து வைக்கப்பட்டது.

அது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் மற்றும் இலங்கை ஜப்பான் தூதுவரின் பங்கு பெற்றவுடன் நடைபெற்றது.

வீட்டுவன்முறை காரணமாக அழுத்தத்திற்கு உள்ளான பெண்கள் மற்றும் பிள்ளைகளை அரச பாதுகாப்புடன் குறுங்காலத்திற்கு தங்க வைத்து சமூக மயப்படுத்தும் திட்டம் தற்காலிக பெண்கள் காப்பு மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

தற்போது தற்காலிக காப்பு மத்திய நிலையங்கள் 10 காணப்படுவதாகவும், நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்ட மத்திய நிலையத்துடன் அது 11 நிலையம் வரை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

 

Share This