
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக வெப்பநிலை குறையக் கூடும் என வானிலை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குளிர்கால வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுட்ன, ரயில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இன்று புதிய குளிர் வானிலை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை கும்ப்ரியாவில் உள்ள ஷாப்பில் வெப்பநிலை மைனஸ் 10.9 செல்சியல் ஆகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் ஸ்காட்லாந்தின் பான்ஃப்ஷையரில் வானிலை அலுவலகத்தால் 52 சென்றி மீட்டர் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை, பனிப்பொழிவு உள்ள பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 12 செல்சியஸாக குறையக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்தனர்.
மழை, பனிப்பொழிவு ஆகியவற்றின் கலவையானது ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் தென்கிழக்கு நோக்கி நகரும் என்றும், பின்னர் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மத்திய மற்றும் வடக்கு ஸ்காட்லாந்தில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் இது மாலை வரை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் பனி பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் வேல்ஸின் மேற்கிலும், டெவோன் மற்றும் கார்ன்வாலிலும் கூடுதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான ஆம்பர் குளிர் வானிலை சுகாதார எச்சரிக்கைகள் வெள்ளிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என்று வானிலை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
