இங்கிலாந்தில் தாய், தங்கையை சுட்டுக்கொன்ற வாலிபருக்கு 49 ஆண்டு சிறை

இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பிரோஸ்பர் (வயது 19). கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த பொலிஸார் நிக்கோலசை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். எனவே நிக்கோலசுக்கு 49 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.