வரி திருத்தம் : இலங்கை இன்று அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் பேச்சு

பரஸ்பர வரி குறைப்பு குறித்து அமெரிக்காவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18) நடைபெற உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் மெய்நிகர் முறையில் நடத்தப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் பிற தொடர்புடைய அரசு அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் நடைபெறும்.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை மீது அமெரிக்கா 44% பரஸ்பர வரி விதித்தது. ஆனால் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரி திருத்தத்தில் இலங்கைக்கு 30% வரியையே அமெரிக்கா விதித்துள்ளது.
அத்துடன், தொடர்ச்சியான பேச்சுகளை நடத்தவும் தயார் என அறிவித்திருந்தது. இந்தப் பின்புலத்திலேயே இன்று மீண்டும் பேச்சுகள் இடம்பெற உள்ளன.