இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய வீட்டுத் திட்டம், மலையக மக்களுக்குரிய உரிமைகள் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
மலையகச் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என இதன்போது இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.