
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்திருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஆனந்த் விஜயபால, மலையகப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்.
அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் இந்த கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
