
தமிழ்நாட்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது
“2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் நேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இவ்வாறு இடைக்கால வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் வருவாய்ப் பற்றாக்குறை இந்திய மதிப்பில் 48,696 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது.
வரவு-செலவுத் திட்டத்தின் பிரகாரம் 2027ஆம் ஆண்டும் மார்ச் மாதமாகும் போது தமிழகத்தின் மொத்த கடன் 10 இலட்சம் கோடியே 71ஆயிரம் ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு-செலவுத் திட்ட வருவாய்ப் பற்றாக்குறை 48,696 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலை இலக்காக கொண்டு பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசும் வரவு – செலவுத் திட்டத்தை ஆளும் திமுக அரசு முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சியான அதிமுக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
