தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகள் குழு ஆய்வு

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் ராமச்சந்திரா கலையரங்கத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகள் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 28ஆம் திகதி ராமச்சந்திரா கலையரங்கத்தில் காலை 9 மணிக்கு தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, பொதுக்குழுக் கூட்டம் இடம்பெறும் ராமச்சந்திரா கலையரங்கத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.