அமெரிக்காவுடன் பேச்சுகள் தொடரும் – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுகள் தொடரும் – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

வரித் திருத்தங்களை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறியதுடன், அவர் மேலும் தெரிவித்தாவது,

அரசாங்கமாக அமெரிக்காவுடன் பேச்சுகளை நடத்தி வருகிறறோம். அமெரிக்காவின் செனட் சபையில் அல்லது அரசாங்கத்தில் எமது நண்பர்கள் இருக்கிறார்கள் என இதனை செய்ய முடியாது. இதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனமொன்று அங்கு உள்ளது. அவர்களுடன் முன்னேற்றகரமான பேச்சுகளை ஆரம்பித்துள்ளோம்.

இதன் அடிப்படையில் முன்னோக்கி செல்ல முடியும். இறுதி பேச்சுகளின் பிரதிபலன் என்ன என தற்போது கூற முடியாது. இதனையும் விட முன்னோக்கிய சிறந்த வரித்திட்டமொன்றுக்கு செல்ல முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Share This