எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட முன் முன்னாயத்த நடவடிக்கைகளை எடுங்கள் – கெமுனு விஜேரத்ன அவசரக் கோரிக்கை

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் பொது போக்குவரத்தை சீராக பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து போதுமான டீசல் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளளார்.
”நாட்டின் போக்குவரத்து அமைப்பு சீர்குலைந்து விடக்கூடாது. ஏனெனில் இது பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கிறது.
COVID-19 தொற்றுநோய் காலத்தில், கடந்த அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து பேருந்துகளுக்கு டீசலைப் பெறுவதற்கான ஒரு முறையை அறிமுகப்படுத்தியது. ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எரிபொருளை விநியோகிக்க QR குறியீடு முறையையும் செயல்படுத்தப்பட்டது.
நிலைமை இன்னும் மோசமாக இல்லை என்றாலும், அது மோசமடைவதைத் தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.