Tag: Tamil
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி
பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 72 வயதுடைய ... Read More
ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.. சம்பவம் ... Read More
முச்சக்கர வண்டியின் புதிய விலை 02 மில்லியன் ரூபாவை தாண்டும்
முதல் தொகுதி வாகனங்களைப் பெற்ற பின்னர் புதிய பஜாஜ் ஆர்.இ முச்சக்கர வண்டி, பத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐயாயிரத்திற்கு (1,995,000) விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது ... Read More
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் ... Read More
பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More
செலென்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்த ட்ரம்ப் – ஐரோப்பிய தலைவர்கள் பலரும் உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆதரவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து இருவரிடையேயான பிளவை ஆழப்படுத்தியுள்ளார். சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகளிலிருந்து கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ... Read More
ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது
அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிறுமி அம்பலாங்கொடையில் உள்ள ஒரு ... Read More
கட்டுப்பணத்தை மீளளிக்கத் தீர்மானம்
2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பணத்தை வைப்பு செய்தமைக்காக வழங்கப்பட்ட ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான ... Read More
ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் பலி
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை இந்த ... Read More
கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த ... Read More












