டி20 உலகக் கிண்ணம்!! தகுதிப் பெற்ற அணிகளின் விபரங்கள் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும் 2026 இருபது20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற அனைத்து அணிகளையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதன்படி, போட்டியில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை 20 ஆகும். நேற்று உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற கடைசி அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடம்பிடித்துள்ளது.
மேலும், நேபாளம் மற்றும் ஓமன், கனடா, இத்தாலி மற்றும் நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் தகுதி பெற்றுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கின்றன.