
T20 உலகக்கிண்ணத் தொடர் 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவர் சுப்மன் கில் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அக்ஷர் படேலுக்கு உப தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழாத்தில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
2026 T20 உலகக்கிண்ணத்திற்கான இந்தியக் குழாம் பின்வருமாறு,
சூர்யகுமார் யாதவ் (தலைவர்)
அக்ஷர் படேல் (உப தலைவர்)
அபிஷேக் சர்மா
சஞ்சு சம்சன் (விக்கெட் காப்பாளர்)
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
சிவம் டுபே
ரிங்கு சிங்
ஜஸ்பிரித் பும்ரா
ஹர்ஷித் ரானா
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
வருண் சக்ரவர்த்தி
வாஷிங்டன் சுந்தர்
இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்)
