தோட்டத் தொழிற்துறை மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழப்பு

தோட்டத் தொழிற்துறை மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழப்பு
நாளுக்கு நாள் தோட்டத் தொழில் துறை மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து வருவதால் அவர்கள் மாற்றுத் தொழில்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய அங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாடாளாவிய ரீதியில் கொரோனா பரவி மக்கள் கஷ்டத்துக்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருந்த நேரத்திலும் கூட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி உயிரையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்று அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்தான் தேயிலைத் தொழிற் துறையை பாதுகாத்து வந்துள்ளார்கள். எனினும், அவர்களின் நாளாந்த சம்பள உயர்வைப் போராடிப் பெற வேண்டிய நிலையிலேயே இருந்தார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஆண்டில் அவர்களின் நாளாந்த சம்பளம் 1350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. எனினும் அதை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாத வகையில் வழமைக்கு மாறாக அதிகளவு கொழுந்து பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகங்கள் கெடுபிடிகளை ஏற்படுத்தியதால் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் 1000 முதல் 1200 ரூபா வரையில் சம்பளத்தைப் பெற்று வருகிறார்கள்.
ஒரு மாதத்தில் 20 நாட்கள் வேலை செய்யும் போது 20 ஆயிரத்துக்கும் குறைவன சம்பளத்தையே பெற வேண்டிய நிலையில் உள்ளார்கள். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்க முடியாமலும், பிள்ளைகளின் கல்விக்கான செலவை சமாளிக்க முடியாமலும், நிர்வாகங்களின் கெடுபிடிகளுக்கு முகங் கொடுக்க முடியாமலும் வருமானத்தைத் தேடி வேறு தொழில்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு வேறு தொழில்களுக்குச் செல்லும் போது, அவர்களின் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றில் இழப்பையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே தொடர்ந்து தோட்டத் துறையை நம்பியிருப்பதில் பயனில்லை என்ற அதிருப்திக்கு ஆளாகியுள்ளதோடு,தேயிலைத் துறைமீது கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்து வருகிறார்கள்.
எனவே, அரசாங்கம், வரவு செலவுத் திட்டத்தில் 1700 ரூபாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகக் கூறியள்ளதை நடைமுறைப்படுத்தி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களையும், கேள்விக் குறியாகி வரும் தேயிலைத் துறையையும் காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லாதுவிட்டால் நாடு அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் பாரிய இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளா
Share This