ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக டி.வி.சானக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், புதிய கிராமத் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை நியமிக்கும் நிறுவனப் பணிகள் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.