அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலையுடன் நிறைவடைவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்திருந்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை முன்னிட்டு இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தத்தின் போது, அவசர சிகிச்சை சேவைகள் மற்றும் முக்கிய மருத்துவ சேவைகள் வழக்கம்போல் வழங்கப்பட்டதாகவும், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக சங்கத்தின் செயற்குழு விரைவில் கூடவுள்ளதாகவும், அடுத்தகட்ட தீர்மானங்கள் அதன் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )