சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

கடற்கரையில் இருந்தவர்களை குறிவைத்து இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் இரண்டு பொலிஸ“ அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )