இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம்

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம்

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண், கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரான பெண் இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்ட சுமார் 200 இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சந்தேகநபர் தொடர்பில் எதுவித தகவல்களும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கையடக்கத் தொலைபேசி பாவனையையும் அவர் நிறுத்தியுள்ளதால் சந்தேகநபர் தொடர்பில் எந்தவொரு தடயமும் கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அவர் தென் மாகாண கடற்கரை வழியாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Share This