இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்பூரில் மே 24ஆம் திகதி மீளவும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள லீக் போட்டிகள் யாவும் ஆறு மைதானங்களில் நடத்தி முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெங்களூரு, ஜெய்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அஹமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தலா இரண்டு போட்டிகள் நடைபெறும். ப்ளே ஓவ் போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் அவற்றுக்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாவது தகுதிகாண் போட்டி மே 29ஆம் திகதியும் நீக்கல் போட்டி மே 30ஆம் திகதியும் இரண்டாவது தகுதிகாண் போட்டி ஜூன் 1ஆம் திகதியும், இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

Share This