இரண்டு கோடி பார்வைகளைக் கடந்த சூர்யாவின் ரெட்ரோ பட டைட்டில் டீசர்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் சூர்யா நடிக்கும் திரைப்படம் ரெட்ரோ.
இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இத் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதோடு அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு குறித்த வீடியோ யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்ள்ளது.
இப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.