சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள படத்தின் பெயர் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டீசர் ஒன்றையும் படக்குழு இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளது.
இப்படத்தினை மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.
ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இது காதலை மையப்படுத்திய படம் என்று கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் தெரிவித்திருந்தார். சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த கங்குவா திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது.
இந்நிலையிலேயே, புதியப் படடித்தின் பெயர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பணிகளை முடித்துள்ள சூர்யா தற்போது, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.