தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு

தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நேற்று (23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழிகளின் அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் பல்வேறு சுலோகங்களை ஏந்தி ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  ஆதரவாளர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )