தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபா அபராதம் விதித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தையில் விற்பனை செய்யப்படவிருந்த சிவப்பு சீனியில் நிறம் கலக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது சீதுவ பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இதன்போது மாதிரிகள், இலங்கை தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்பதை ஆய்வக அறிக்கைகள் உறுதிப்படுத்திய பின்னர்,
சிவப்பு சீனியை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் 2023 ஆம் ஆண்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதன்படி, நேற்று (19) குற்றங்களை ஒப்புக்கொண்ட குறித்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )